சென்னை | கத்தியை காட்டி மிரட்டி ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரெட்ரிச் வின்சென்ட்(23). இவர் இந்தியாவுக்கு சுற்றுலா பயணமாக, இலங்கை வழியாக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் சென்டிரல் சென்று, தனது பாஸ்போர்ட்டை காண்பித்து இந்திய சிம் கார்டு பெற்றுக் கொண்டார்.

சென்னை: கத்தியை காட்டி மிரட்டி ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரெட்ரிச் வின்சென்ட்(23). இவர் இந்தியாவுக்கு சுற்றுலா பயணமாக, இலங்கை வழியாக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் சென்டிரல் சென்று, தனது பாஸ்போர்ட்டை காண்பித்து இந்திய சிம் கார்டு பெற்றுக் கொண்டார். பின், இரவு சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நடந்து சென்றார்.
What's Your Reaction?






